Images
  • russia covid
    (படம்: REUTERS/Polina Nikolskaya)

ரஷ்யாவில் ஒரே நாளில் 957 பேர் கிருமித்தொற்றால் மரணம்

ரஷ்யாவில், ஒரே நாளில் மேலும் 957 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

24 மணி நேர இடைவெளியில், 29,409 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

தலைநகர் மாஸ்கோவில் மட்டும், 5,002 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அதையடுத்து, அந்நகரில் கடைத்தொகுதி போன்ற பொது இடங்களில் பொதுமக்களுக்கு இலவச உடனடிக் கிருமித்தொற்றுப் பரிசோதனை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மாஸ்கோவில் அண்மையில் மேலும் அதிகமானோர் கிருமித்தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கடந்த இரு வாரங்களில், அங்கு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பானது.  

Top