Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யாவில் அதிகரிக்கும் நோய்த்தொற்றுக்கு இடையே யூரோ 2020 காற்பந்துப் போட்டி

யூரோ 2020 காற்பந்துப் போட்டிகள் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில் 

வாசிப்புநேரம் -

யூரோ 2020 காற்பந்துப் போட்டிகள் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில் ரஷ்யாவில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

சில முக்கியமான ஆட்டங்களை ஏற்றுநடத்தும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (St. Petersburg) நகரிலும் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் கூடியுள்ளன.

காலிறுதிப் போட்டி உட்பட 7 ஆட்டங்கள் அந்நகரில் நடைபெறவுள்ளன.

விளையாட்டாளர்கள், ரசிகர்கள் ஆகியோரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போட்டி ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.

இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதிய அளவில் இல்லை என்று கவனிப்பாளர்கள் குறைகூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெறவிருந்த யூரோ 2020 காற்பந்துப் போட்டி, COVID-19 நோய்த்தொற்றுக் காரணமாக இந்த ஆண்டு ஜூன் ஜூலை மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போட்டியின் முதல் ஆட்டம் வரும் சனிக்கிழமை (ஜூன் 12) சிங்கப்பூர் நேரப்படி பின்னிரவு 3 மணிக்கு ரோமில் நடைபெறவிருக்கிறது.

அதில் இத்தாலியும் துருக்கியும் மோதுகின்றன.


-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்