Images
  • vaccine covid
    (கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration/File Photo)

COVID-19: அக்டோபர் மாதத்தில் பெரிய அளவில் தடுப்பு மருந்தைப் பொதுமக்களுக்கு வழங்கவிருக்கும் ரஷ்யா

COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக அக்டோபர் மாதத்தில் பெரிய அளவில் பொதுமக்களுக்குத் தடுப்பு மருந்தை வழங்கவிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

தற்போது மனிதர்களிடம் தடுப்பு மருந்துச் சோதனை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்தைப் பொதுமக்களுக்கு வழங்கத் தேவையான ஆவணங்களைத் தயாரித்து வருவதாகவும் ரஷ்யா குறிப்பிட்டது.

தடுப்பு மருந்து முதலில் மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சு கூறியது.

நோய்த்தொற்றுக்கு எதிராக Gamaleya கல்வி நிறுவனம் தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும் அதன் நம்பகத்தன்மை குறித்துக் கவனிப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உலகச் சுகாதார நிறுவனம், தற்போது குறைந்தது 4 தடுப்பு மருந்துகள் சோதனையின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அவற்றில் மூன்று சீனாவில் தாயரிக்கப்பட்டவை. மற்றொன்று பிரிட்டனில் உருவாக்கப்பட்டது.  

Top