Images
  • russia supermarket fire (1)
    (படம்: YERANA AKOPKOKHVIAN/via REUTERS)

ரஷ்யாவில் கேள்விக்கு உள்ளாகிவரும் தீப்பாதுகாப்புத் தரநிலைகள்

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள (St Petersburg) பேரங்காடி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

சம்பவத்தில் பேரங்காடியின் கூரை இடிந்து விழுந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன.

சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

காலை 8.30 மணியளவில் தீயணைப்புச் சேவை நிலையத்துக்குச் சம்பவம் குறித்துத் தகவல் வந்தது.

24 மணி நேரம் இயங்கும் பேரங்காடி, தீச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ரஷ்யாவின் தீப்பாதுகாப்புத் தரநிலைகள் குறித்து கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

கடந்த மார்ச் மாதம் சைபீரியாவிலுள்ள பேரங்காடி ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 60க்கும் அதிகமானோர் மாண்டனர்.  

Top