Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'சோதிக்காமல் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்கிறது ரஷ்யா'-அஞ்சும் நிபுணர்கள்

ரஷ்யா கொரோனா கிருமித்தொற்றுக்காகத் தயாரித்திருக்கும் தடுப்பு மருந்து போதிய அளவு சோதிக்கப்படவில்லை என்று ஜெர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது.

வாசிப்புநேரம் -
'சோதிக்காமல் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்கிறது ரஷ்யா'-அஞ்சும் நிபுணர்கள்

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration/File Photo)

ரஷ்யா கொரோனா கிருமித்தொற்றுக்காகத் தயாரித்திருக்கும் தடுப்பு மருந்து போதிய அளவு சோதிக்கப்படவில்லை என்று ஜெர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது.

மக்களுக்கு தடுப்பு மருந்தை முதலில் அளிப்பது நோக்கமில்லை, பாதுகாப்பான மருந்தைத் தயாரிப்பதே நோக்கம் என்று ஜெர்மானிய சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) COVID-19 தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்தார்.

கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு ரஷ்யா என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், இறுதிக்கட்ட சோதனைகள் முடிவடைவதற்கு முன்னரே ஒப்புதல் வழங்கப்பட்டது குறித்து, நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கிருமித்தொற்றுச் சூழலாக இருந்தாலும், தடுப்பு மருந்து மீதான நம்பிக்கையை மக்களிடையே உருவாக்க, தகுந்த ஆராய்ச்சியும், சோதனைகளும் நடத்தப்படுவது அவசியம் என்று திரு. ஸ்பான் கூறினார்.

மனிதர்களிடம் நடத்தப்பட்டும் சோதனைகளில் 10 விழுக்காட்டுச் சோதனைகள் மட்டுமே வெற்றிகரமாக நடத்தப்படுகின்றன.

அந்நிலையில், ரஷ்யா, பாதுகாப்பை விடுத்து, நாட்டின் கௌரவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்