Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சட்டவிரோதத் தகவல்களை நீக்கத் தவறியதால் Facebook, Twitterக்கு ரஷ்யா அபராதம்

சட்டவிரோதமான தகவல்களை நீக்கத் தவறியதால் அமெரிக்கச் சமூக ஊடக நிறுவனங்களான Facebook, Twitterக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சட்டவிரோதத் தகவல்களை நீக்கத் தவறியதால் Facebook, Twitterக்கு ரஷ்யா அபராதம்

கோப்புப்படம்

சட்டவிரோதமான தகவல்களை நீக்கத் தவறியதால் அமெரிக்கச் சமூக ஊடக நிறுவனங்களான Facebook, Twitterக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

Facebookக்கு சுமார் 81,000 டாலரும் Twitterக்கு சுமார் 80,000 டாலரும், மாஸ்கோவின் மாவட்ட நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக, உள்ளடக்க அத்துமீறலில் ஈடுபடும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது ரஷ்யா, குறைந்த தொகையை அபராதமாக விதித்து வருகிறது.

அதே நேரத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் அலுவலகங்களைத் திறக்கும்படியும் மாஸ்கோ வலியுறுத்தி வருகிறது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யர்களின் தனிநபர் தகவல்களை, ரஷ்யாவிலுள்ள கட்டமைப்புகளில்
சேமித்து வைப்பதைக் கட்டாயப்படுத்த, அதிகாரிகள் முயன்றுவருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்