Images
  • russia covid
    (படம்: AFP)

தடுப்பூசிக்கு எதிர்ப்புத் தெரிவிப்போரை COVID-19 வார்டுகளுக்கு அழைக்கும் ரஷ்ய மருத்துவர்கள்

COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மறுப்போருக்குக் கிருமிப்பரவலின் தாக்கத்தை எப்படி உணர்த்துவது?

COVID-19 வார்டுகளுக்கே வந்து பாருங்கள் என்கின்றனர் ரஷ்யாவின் முன்னணி மருத்துவர்கள்.

தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளைக் கூறிவரும் பிரபலங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் 11 மருத்துவர்கள் எழுதிய கடிதத்தில் அது குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்களுக்கென நேரம் ஒதுக்கி COVID-19 சிகிச்சை நிலையங்களைச் சுற்றிக் காட்டத் தயார் என அந்த மருத்துவர்கள் கூறினர்.

அதன் பின்னராவது அவர்கள் தடுப்பூசி குறித்த தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வார்கள்; குறைவானோர் கிருமித்தொற்றால் இறப்பார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நோய்த்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.

எனினும், அங்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.

இதுவரை 37 விழுக்காட்டு ரஷ்யர்கள் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

-AFP 

Top