Images
இயந்திரங்களில் பறவைகள் சிக்கியதால், அவசரமாகத் தரையிறங்கிய ரஷ்ய விமானம்
மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட ரஷ்ய விமானத்தின் இரண்டு இயந்திரங்களிலும் பறவைகள் மோதிச் சிக்கிக் கொண்டதால், அது அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது.
யூரல் ஏர்லைன்ஸுக்குச் (Ural Airlines) சொந்தமான அந்த Airbus 321 ரக விமானத்தில் அப்போது 233 பேர் இருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் பறவைக் கூட்டத்தை எதிர்கொண்டது விமானம்.
பறவைகளில் சில விமானத்தின் இயந்திரத்தினுள் இழுக்கப்பட்டதால் அது ஸுகோவ்ஸ்கி (Zhukovsky) அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சோளத் திடலில் தரையிறக்கப்பட்டது.
விமானத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் நான்கு பேர் லேசான காயங்களோடு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.