Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம்?

தென் கொரிய மீட்புக் குழு கண்டுபிடித்துள்ள ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் இருப்பதாக நம்பப்படுகிறது.

வாசிப்புநேரம் -
கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம்?

(படம்: Shinil Group)

தென் கொரிய மீட்புக் குழு கண்டுபிடித்துள்ள ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஜப்பானியப் போர்க்கப்பல்களுடன் நடந்த சண்டையில், அந்த ரஷ்யக் கப்பல் 113 ஆண்டுகளுக்கு முன் மூழ்கியது.

Dimitrii Donskoi என அழைக்கப்படும் அந்தக் கப்பலில் தங்கக் கட்டிகளும் காசுகளும் இருப்பதாக Telegraph நாளேடு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

தென் கொரியாவின் Ulleungdo தீவின் அருகே கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அதில் தங்கம் இருக்கும் சாத்தியம் குறித்து சில நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

போர்க்கப்பலில் எப்படி பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள தங்கம் இருக்க முடியும் என்று அவர்கள் கேட்கின்றனர்.

கப்பலைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறும் Shinil Group நிறுவனத்தின் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், புதையலில் ஒரு பகுதி, ரஷ்யாவிற்கும் கொரியாவிற்கும் இடையே ரயில் பாதை அமைக்கப் பயன்படும் என்றும் பாதிப் புதையல் ரஷ்ய அரசாங்கத்திடம் சேர்க்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், அந்தப் புதையலில் 10 விழுக்காடு Ulleungdo தீவில் பயணத்துறையை மேம்படுத்துவதற்குச் செலவிடப்படும் எனவும் அது குறிப்பிட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்