Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வர்த்தக ரீதியான முதலாவது திரையரங்கம் சவுதி அரேபியாவில் அறிமுகம்

சவுதி அரேபியாவில், வர்த்தக ரீதியான முதலாவது திரையரங்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வர்த்தக ரீதியான முதலாவது திரையரங்கம் சவுதி அரேபியாவில் அறிமுகம்

(படம்: Pixabay)

சவுதி அரேபியாவில், வர்த்தக ரீதியான முதலாவது திரையரங்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலம், சுமார் 40 ஆண்டுகளாகத் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்தது.

பழமைவாதப் போக்குடைய நாட்டை, நவீனமயப்படுத்த விரும்பும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் முயற்சியால், சவுதி அரேபிய வெள்ளித்திரை ரசிகர்களின் கனவு நனவானது.

ரியாத்திலுள்ள பல்லிசை அரங்கு, திரையரங்காக உருமாற்றம் பெற்றுள்ளது.

நாளை முதல் திரைக்காட்சி அரங்கேறும். நுழைவுச் சீட்டு விற்பனை இன்று தொடங்கியது.

450 பேர் அமர்ந்து ரசிக்க முடியும் இந்தத் திரையரங்கில்.

முதலில் திரைக்குவரும் ஹாலிவுட் திரைப்படமான "Black Panther"
சவுதி அரேபிய வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கப் போகிறது.

திரையரங்குகள் மீதான தடை முடிவுக்கு வந்ததை, நம்ப முடியாமல் கொண்டாடித் தீர்க்கின்றனர் சவுதி அரேபியர்கள்.

சமூக ஊடகங்களில், பட்டத்து இளவரசருக்குப் பாராட்டு குவிகிறது.

குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட இன்னும் ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு அம்சம் கிடைத்திருப்பதாகப் பெண்கள் பூரித்துப் போகின்றனர்.

2030-ஆம் ஆண்டுக்குள், 350 திரையரங்குகளை உருவாக்க, சவுதி அரேபிய அரசாங்கம் திட்டமிடுகிறது.

பழமைவாதப் போக்குடையோரின் வற்புறுத்தல் காரணமாக, 1980-களில், சவுதி அரேபியாவில் திரையரங்குகள் மூடப்பட்டன.

அப்போதிலிருந்து வீட்டிலுள்ள தொலைக்காட்சிகளில் மட்டுமே சவுதி அரேபியர்கள் திரைப்படங்களை ரசித்து வந்திருக்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்