Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எங்களை வேறுவிதமாய் நடத்துவது நியாயமா?' - பணக்கார நாடுகளைக் குறைகூறும் தென்னாப்பிரிக்கா

எங்களை வேறுவிதமாய் நடத்துவது நியாயமா?' - பணக்கார நாடுகளைக் குறைகூறும் தென்னாப்பிரிக்கா

வாசிப்புநேரம் -
எங்களை வேறுவிதமாய் நடத்துவது நியாயமா?' - பணக்கார நாடுகளைக் குறைகூறும் தென்னாப்பிரிக்கா

படம்: AFP / Michele Spatari

தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சு, உலக நாடுகள் விதித்துள்ள பயணத் தடைக்குத் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகின் வேறு பகுதிகளில் புதுக் கிருமிவகை கண்டுபிடிக்கப்படும்போது எடுக்கப்படும் பதில் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

தென்னாப்பிரிக்காவைவிட்டு வெளியேற விரும்பும் பயணிகளால் அங்குள்ள விமான நிலையங்களில் நெரிசல் நிலவுகிறது.

திடீரெனப் பல நாடுகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்படும் விமானங்களுக்குத் தடை விதித்ததால், பயணிகள் செய்வதறியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

இதற்கிடையே, ஆப்பிரிக்க ஒன்றிய அதிகாரி ஒருவர், புதுவகைக் கிருமி உருவானதற்குப் பணக்கார நாடுகளே காரணம் என்று BBC செய்தி நிறுவனத்திடம் குறைகூறியுள்ளார்.

வளர்ந்த நாடுகள், தடுப்பு மருந்துகளைப் பதுக்கிவைத்துக் கொண்டதாக அவர் சாடினார்.

அதனால், வேகமாகவும் சமமான வகையிலும் உலக மக்களுக்குத் தடுப்புமருந்து கிடைக்கவில்லை என்பதை அவர் சுட்டினார்.

பணக்கார நாடுகள் மூன்றாவது Booster தடுப்பூசிகளைப் போட்டுவரும்போது, வளரும் நாடுகளில் 7 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதை மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்