Images
  • Sack Tillerson (1)
    (படம்: AFP/Saul Loeb) 

வெளியுறவு அமைச்சரை வெளியேற்றியதற்குக் காரணம் கருத்து வேறுபாடுகள்: அமெரிக்க அதிபர்

நேற்று, திரு. டிரம்ப் தமது Twitter பக்கத்தில் அது குறித்த செய்தியை முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதில், அவர் தமக்கும் திரு டில்லர்சனுக்கும் கருத்து வேறுபாடு நிலவியதன் காரணமாக, திரு டில்லர்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறினார்.

அதனை அடுத்து, மூன்று மணி நேரம் கழித்து, அவர் திரு டில்லர்சனிடம் அதுபற்றி தொலைபேசி வழி கூறினார்.

அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராக, மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் மைக் போம் பே யோவை (Mike Pom Pay Yo) நியமித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குனராக, அதன் தற்போதைய துணை இயக்குனர் ஜீனா ஹாஸ்பெல் (Gina Haspel) நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குநராகப் பதவி வகிக்கவுள்ள முதல் பெண் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top