Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விரைவுச்சாலைக்காகச் சாய்க்கப்பட்ட பழங்குடியினரின் புனித மரம்

ஆஸ்திரேலியாவில், ஜாப் வருங் (Djab Wurrung) என்ற பழங்குடியினரின் புனித மரம், விரைவுச்சாலைக் கட்டுமானத்திற்காக கனரக இயந்திரம் கொண்டு சாய்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழங்குடிக் கலாசார ஆர்வலர்கள் கோபமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவில், ஜாப் வருங் (Djab Wurrung) என்ற பழங்குடியினரின் புனித மரம், விரைவுச்சாலைக் கட்டுமானத்திற்காக கனரக இயந்திரம் கொண்டு சாய்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழங்குடிக் கலாசார ஆர்வலர்கள் கோபமடைந்துள்ளனர்.

மாநில அதிகாரிகள் திங்கட்கிழமையன்று (26 அக்டோபர்) ஜாப் வருங் மக்களின் அந்த மரத்தை வெட்டிச் சாய்த்ததாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பாதுகாக்கப்பட்ட மரங்கள் பட்டியலில் அந்த மரம் இல்லை என அதிகாரிகள் கூறினர்.

சென்ற ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தில் நிலத்தின் சொந்தக்காரர்களான சில பழங்குடியினர், 250 முக்கிய மரங்களில் 12 மரங்களைப் பாதுகாக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் பழங்குடியினரைச் சாராத ஆர்வலர்கள் சிலர், புவாங்கோர் (Buangor) அருகிலுள்ள மற்ற மரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அங்கு முகாமிட்டனர்.

சுமார் 25 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மரங்களைைப் பாதுகாக்க வேண்டி அவற்றில் ஏறிய மற்ற சிலரை அதிகாரிகள் இழுத்துச் செல்லும் காட்சிகளைச் சமூக ஊடகங்களில் காணலாம்.

அதிகாரிகள், வெட்டப்பட்ட மரத்துக்குச் சுமார் 100 வயது எனக் கூறுகின்றனர். ஆனால் ஆர்வலர்கள் அதன் வயது 350 என மதிப்பிட்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்