Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தம்மைப் பார்க்கவந்து காயமடைந்த ரசிகருக்கு சலா தந்த இன்ப அதிர்ச்சி

தம்மை பார்க்கவந்த 11 வயது ரசிகர் கீழே விழுத்து மூக்கை உடைந்துக்கொண்டதை அறிந்த லீவர்பூல் காற்பந்து வீரர் மோ சலா அந்தக் குட்டி ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
தம்மைப் பார்க்கவந்து காயமடைந்த ரசிகருக்கு சலா தந்த இன்ப அதிர்ச்சி

படம்: Twitter/joecooper93

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தம்மை பார்க்கவந்த 11 வயது ரசிகர் கீழே விழுத்து மூக்கை உடைந்துக்கொண்டதை அறிந்த லீவர்பூல் காற்பந்து வீரர் மோ சலா அந்தக் குட்டி ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

லூயிஸ் ஃபவ்லர் எனும் 11 வயதுச் சிறுவன் தனது சகோதரனுடன் சலா சென்றுகொண்டிருந்த காரைப் பின்தொடர்ந்து ஓடினார். அப்போது லூயிஸ் கம்பத்தில் மோதிக் கீழே விழுந்து மூக்கை உடைத்துக்கொண்டார்.

அதைக் கண்ட சலா அந்தக் குட்டி ரசிகருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்ததா என்று நலம் விசாரிப்பதற்காகக் காரை மீண்டும் அந்த இடத்திற்கு திருப்பினார்.

சிறுவனை நலம் விசாரித்த சலா அதன்பிறகு சேர்ந்து படம் எடுத்துக்கொண்டார்.

சலாவின் அந்தச் செயல் சிறுவனை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்