Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காவல்துறையின் கையில் சிக்கியிருக்கும் லிவர்பூல் விளையாட்டாளர் சாலா?

லிவர்பூல் காற்பந்துக் குழு விளையாட்டாளர் முகமது சாலா (Mohamed Salah) வாகனம் செலுத்தும்போது கைபேசி பயன்படுத்தியதைக் காட்டும் காணொளி ஒன்று காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
காவல்துறையின் கையில் சிக்கியிருக்கும் லிவர்பூல் விளையாட்டாளர் சாலா?

(படம்: AFP/Oli SCARFF)

லிவர்பூல் காற்பந்துக் குழு விளையாட்டாளர் முகமது சாலா (Mohamed Salah) வாகனம் செலுத்தும்போது கைபேசி பயன்படுத்தியதைக் காட்டும் காணொளி ஒன்று காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

லிவர்பூல் நிர்வாகத்தினரே அந்தக் காணொளியைக் காவல்துறையிடம் கொடுத்ததாக அதன் பேச்சாளர் கூறினார்.

சமூக ஊடகத்தில் பரவிய காணொளி குறித்து சாலாவிடம் பேசியபிறகு அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கொண்டு எந்தக் கருத்தையும் லிவர்பூலோ சாலாவோ முன்வைக்கப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

காணொளி கிடைத்திருப்பதாகக் காவல்துறை Twitter பக்கத்தில் பதிவுசெய்திருந்தது.

காணொளியின் தொடர்பில் முன்வந்து தகவல் அளித்ததற்குக் குழுவுக்கு நன்றியையும் காவல்துறை தெரிவித்துக்கொண்டது.

லிவர்பூலுக்காக அனைத்துப் போட்டிகளிலும் இதுவரை 44 கோல்கள் புகுத்திய சாலா வாகனம் செலுத்தியபோது கைபேசி பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால், 1300 டாலர் வரை அபராதமும் குற்றப்புள்ளிகளும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்