Images
  • same Sex Penguins
    (படம்: Reuters)

லண்டனில் 'பாலினம் இல்லாத' பெங்குவின் குஞ்சு

லண்டனிலுள்ள கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தில் பாலினத்தின்படி வகைப்படுத்தப்படாத முதல் பெங்குவின் (penguin) குஞ்சு வளர்க்கப்படும்.

அதனை இரு பெண் பெங்குவின்கள் வளர்க்கவுள்ளன.

ரொக்கி, மராமா ஆகிய அந்த இரு பெங்குவின்களும் ஆறு இனப்பெருக்கப் பருவங்களை ஒன்றாகச் செலவிட்டுள்ளன.

அவை அந்த 4 மாத பெங்குவின் குஞ்சைத் தத்தெடுத்துள்ளதாக காட்சியகம் தெரிவித்துள்ளது.

உயிரினங்களிடையே ஓரினச் சேர்க்கை இடம்பெறுவது அரிதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வண்டுகள், டால்ஃபின்கள், செம்மறி ஆடுகள் இடையேயும் இப்போக்கு அரிதல்ல என்று அவர்கள் கூறுகின்றனர்.  

Top