Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Samsung Electronics இணையப்பக்கத்தில் 150 வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல் அம்பலமானது

Samsung Electronics நிறுவனத்தின் பிரிட்டிஷ் இணையப்பக்கத்தில் நேர்ந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 150 வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல் தவறுதலாக அம்பலமானது.

வாசிப்புநேரம் -
Samsung Electronics இணையப்பக்கத்தில் 150 வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல் அம்பலமானது

(படம்: REUTERS/Kim Hong-Ji/File Photo)

Samsung Electronics நிறுவனத்தின் பிரிட்டிஷ் இணையப்பக்கத்தில் நேர்ந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 150 வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல் தவறுதலாக அம்பலமானது.

பயனீட்டாளர்களின் பெயர், தொலைபேசி எண், அஞ்சல், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்கள் இணையத்தில் கசிந்தன.

இருப்பினும் கடன்பற்று அட்டை விவரங்கள் வெளியாகவில்லை.

அது நிறுவனத்தின் கவனத்திற்கு வந்தவுடன், இணையப்பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இப்போது இணையப்பக்கம் சீராக செயல்படுகிறது.

தொழில்நுட்பக் கோளாறு, பிரிட்டனை மட்டுமே பாதித்ததாக நிறுவனம் குறிப்பிட்டது.

வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல் எவ்வளவு நேரத்திற்கு இணையத்தில் காணக் கிடைத்தது என்பது குறித்து, சாம்சுங் நிறுவனம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு கோளாறு குறித்துத் தெரிவிக்கப் போவதாக Samsung Electronics நிறுவனம் தெரிவித்தது 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்