Images
  • Samsung note 9
    (படம்: Mayo Martin)

Samsung Galaxy Note 9 திறன்பேசி - முதல் பார்வை

புதிய Samsung Galaxy Note 9 திறன்பேசியில் கண்ணைப் பறிக்கும் Bluetooth கருவி...

வேறு என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கின்றன?


தகவல்களைப் பதிவு செய்யக் கூடுதல் சேமிப்பு இடம், அறிவார்ந்த கேமரா என பல சிறப்பு அம்சங்கள் உண்டு!

திறன்பேசியில், விளையாட்டு விளையாட வேண்டுமா? அல்லது நீண்ட நேரத்திற்குப் படம் பார்க்க வேண்டுமா? கவலைவேண்டாம்! புதிய Galaxy Note 9 திறன்பேசியின் மின்கல ஆற்றல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை Samsung வெளியிட்டுள்ள திறன்பேசிகளில், இதில் தான் ஆகப் பெரிய மின்கலன் உள்ளது.


எவ்விதத் தடையுமின்றி இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமா? அதன் தொலைத்தொடர்புக் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. விநாடிக்கு 1.2 கிகாபைட் வரை அதன் வேகம் இருக்குமாம். அப்படியென்றால், தடைகளின்றி சட்டென்று இணையம் வாயிலாக படம் பார்க்கவோ பதிவிறக்கம் செய்யவோ முடியும்.

இனிமேல், தகவல்களை உங்கள் திறன்பேசியில் சேமித்து வைக்கப் போதிய இடமில்லை எனும் கவலை உங்களுக்கு வேண்டாம்.

128 கிகாபைட் அல்லது 512 கிகாபைட் சேமிப்பு இடம் கொண்டு Galaxy Note 9 தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அழகழகான படங்களை எடுக்க வேண்டுமா?

அறிவார்ந்த கேமராவைக் கொண்டு அழகிய, மனங்கவரும் படங்களை நீங்கள் எடுக்கலாம்!


இவ்வளவு விவரங்களுக்குப் பின், அதன் விலையைக் கூறாவிட்டால்...?

512 கிகாபைட் அளவைக் கொண்ட Galaxy Note 9, பொதுமக்களிடம் விற்கப்படும் திறன்பேசிகளிலேயே ஆக விலையுயர்ந்த திறன்பேசியாம்...

அது அமெரிக்காவில் 1,250 டாலருக்கு விற்கப்படுமாம். 128 கிகாபைட் அளவைக் கொண்டது 1,000 டாலருக்கு விற்கப்படும்!



 

Top