Images
  • Samsung
    (படம்: REUTERS/Yves Herman)

Samsungஇன் புதிய 5G தொலைபேசிகள் அறிமுகம் - கொரோனா கிருமித்தொற்றால் விநியோகம் பாதிக்கப்படலாம்

5G எனப்படும் ஐந்தாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக்கு ஏற்ற வகையில் மூன்று புதிய தொலைபேசிகளை Samsung தயாரித்துள்ளது.

நூறு மடங்கு உருப்பெருக்கும் வசதிகொண்ட Galaxy S20 கைத்தொலைபேசியையும் அது அறிமுகம் செய்துள்ளது.

மடக்கும் வசதியுள்ள புதிய Galaxy Z Flip கைத்தொலைபேசிக் கண்ணாடியில் கீறல் விழுவதைத் தடுக்க, சிறிய கண்ணாடி இழைகள் பயன்படுத்தப்படுவதாக Samsung உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா கிருமிப் பரவல் காரணமாகப் புதிய கைத்தொலைபேசிகளின் உற்பத்தி பாதிக்கப்படலாம்.

சீனாவுக்கு அப்பால் Samsung தனது உற்பத்திக் கூடங்களை விரிவுபடுத்தியுள்ளது.

என்றாலும், சீனாவிலிருந்து சில முக்கியமான பாகங்கள் தருவிக்கப்பட வேண்டியுள்ளன. எனவே, கிருமிப் பரவலால் கைத்தொலைபேசி விநியோகம் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.  

Top