Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கைத்தொலைபேசி விற்பனையில் Samsungஐ மிஞ்சியது Huawei

கைத்தொலைபேசி விற்பனையில் Samsungஐ மிஞ்சியது Huawei

வாசிப்புநேரம் -
கைத்தொலைபேசி விற்பனையில் Samsungஐ மிஞ்சியது Huawei

(படம்: Toby Melville/File Photo)

சீனாவின் Huawei நிறுவனம், உலகத் திறன்பேசிச் சந்தை விற்பனையில் Samsung நிறுவனத்தை மிஞ்சியுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முதல் முறையாக, Samsung கைத்தொலைபேசிகளின் விற்பனையை Huawei மிஞ்சியுள்ளதாகக் கைத்தொலைபேசி விற்பனை விவரங்களை ஆராயும் Canalys தெரிவித்தது.

Huawei நிறுவனம், அமெரிக்க வர்த்தகத் தடைகள், குறைந்துவரும் வெளியூர் விற்பனை போன்ற சவால்களை சிறிதுகாலமாக எதிர்நோக்கி வருகிறது.

இருப்பினும், Samsung திறன்பேசிகளைவிட Huawei திறன்பேசிகள் சுமார் 2 மில்லியன் அதிகம் விற்பனையாகியுள்ளன.

Huawei நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்க வர்த்தகத் தடைகள் அதன் வெளியூர் வர்த்தகத்தை மெதுவடையச் செய்திருக்கிறது. இருப்பினும், அதன் உள்ளூர் விற்பனை அதிகரித்துள்ளது.

Huawei நிறுவனத்தின் சுமார் 70 விழுக்காட்டுத் திறன்பேசிகள் தற்போது சீனாவில் விற்கப்படுகின்றன.

அதன் வெளியூர் வர்த்தகம் சுமார் 33 விழுக்காடு குறைந்துள்ளது.

உலகச்சந்தை படிப்படியாக மீண்டுவரும்வேளையில், உள்ளூர் விற்பனையை மட்டுமே நம்பியிருந்தால், Huawei அதன் விற்பனையை நிலையாக வைத்திருப்பது சிரமம் என Canalys எச்சரித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்