Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காளைகளை விரட்டிக் காயமடைந்த ஐவர்

 மஞ்சுவிரட்டில் காளைகளை விரட்டியோடும் சான் ஃபெர்மின் (San Fermin) விழாவில் இன்று ஐவர் காயமடைந்தனர்.

வாசிப்புநேரம் -
காளைகளை விரட்டிக் காயமடைந்த ஐவர்

(படம்: Reuters/Susana Vera)

பம்பலோனா, ஸ்பெயின்: மஞ்சுவிரட்டில் காளைகளை விரட்டியோடும் சான் ஃபெர்மின் (San Fermin) விழாவில் இன்று ஐவர் காயமடைந்தனர்.

ஜூலை 7 முதல் ஜூலை 14 நடைபெறும் விழாவில் பம்பலோனா நகரின் சந்துகளில் காளைகளை விரட்டுவது நூற்றாண்டு வழக்கம்.

விழாவுக்காகச் சிறப்பாக வளர்க்கப்படும் காளைகள் ஓடும்போது அவற்றிடம் மாட்டிக் காயமடையாமல் தப்பவேண்டும்.

இம்முறை அந்த ஐவரும் விழுந்து காயமடைந்ததாகச் செஞ்சிலுவைச் சங்கம் கூறியது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

விரட்டப்படும் காளைகள் விழாவின் கடைசிநாள் கொல்லப்படுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்