Images
  • santa clause
    (படம்: Reuters)

'கிறிஸ்துமஸ் தாத்தா உண்மையானவரல்லர்' என்று கூறிய ஆசிரியர்

கலைமான்கள் இழுத்துச் செல்லும் சறுக்குவண்டியில் ஏறி வீடு வீடாகச் செல்லும் கிறிஸ்துமஸ் தாத்தா, சிறாருக்கு அன்பளிப்புகளை அளிப்பார் என்பது பிள்ளைகள் பலரது நம்பிக்கை.

புதிய விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகக் காத்திருந்த பிள்ளைகள் சிலருக்குக் கிடைத்தது வெறும் ஏமாற்றமும் வருத்தமும்தான்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் பயின்ற தொடக்கநிலை ஒன்று மாணவர்களுத்தான் அந்த ஏமாற்றமும் வருத்தமும்.

ஏன் அப்படி?

சீடார் ஹில் தொடக்கப்பள்ளியில் தற்காலிகமாக ஓர் ஆசிரியர் கற்றுக்கொடுத்து வந்தார்.

தொடக்கநிலை ஒன்று மாணவர்களுக்கான வகுப்பில் அவர், கிறிஸ்துமஸ் தாத்தா உண்மையானவரல்லர் என்று கூறிவிட்டார்.

ஈஸ்டர் தின முயல், பற்களைக் காக்கும் தேவதை ஆகியனவும் உண்மையல்ல என்றும் அவர் மாணவர்களிடம் கூறியிருந்தார்.

மனமுடைந்துபோயினர் அந்த மாணவர்கள்...

எனினும், அந்த ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்று உறுதிய செய்த பள்ளி, அவருடைய அடையாளத்தை வெளியிடவில்லை. 

Top