Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கிருமித்தொற்றும், சார்ஸும் வித்தியாசமானது : தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்

COVID-19 கிருமித்தொற்றும், சார்ஸும் வித்தியாசமானது : தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமித்தொற்றும், சார்ஸும் வித்தியாசமானது : தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்

(படம்: Mediacorp)

COVID-19 கிருமித்தொற்றும், சார்ஸும் வித்தியாசமானது என்பது தெளிவாகத் தெரிவதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இருப்பினும் H1N1 என்னும் பன்றிக்காயச்சலுக்கும் COVID-19 கிருமித்தொற்றுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக அவர் கூறினார்.

சீனாவில் COVID-19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் சார்ஸ் நோயை விடக் குறைவு; ஆனால் நோய் பரவும் வேகம் COVID-19இல் அதிகம் என்று அமைச்சர் வோங் தெரிவித்தார்.

சார்ஸ் நோயைப் போல் COVID-19 கிருமி தீவிரமானது இல்லை என்றபோதும், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது சற்று கடினமாக இருப்பதாக அவர் கூறினார்.

COVID-19 மிதமான நோய் என்று கூறிவிடமுடியாது; ஆனால் சார்ஸ் அளவுக்கு மோசமான நோய் அல்ல என்றார் திரு வோங்.

COVID-19 கிருமி பல நாடுகளில் பரவியுள்ளது, சில நாடுகளில் அது பரவியிருந்தும் அதைக் கண்டறிய போதுமான வசதிகள் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியதையும் திரு. வோங் சுட்டினார்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்