Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சனிக் கோளின் 20 புதிய நிலாக்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்க ஆய்வுக் குழு சனிக் கோளின் 20 புதிய நிலாக்களைக் கண்டுபிடித்துள்ளது. அவற்றையும் சேர்த்து, சனிக் கிரகத்தை மொத்தம் 82 நிலாக்கள் சுற்றிவருகின்றன.

வாசிப்புநேரம் -
சனிக் கோளின் 20 புதிய நிலாக்கள் கண்டுபிடிப்பு

(படம்: Pixabay)

அமெரிக்க ஆய்வுக் குழு சனிக் கோளின் 20 புதிய நிலாக்களைக் கண்டுபிடித்துள்ளது. அவற்றையும் சேர்த்து, சனிக் கிரகத்தை மொத்தம் 82 நிலாக்கள் சுற்றிவருகின்றன.

சூரியக் குடும்பத்தின் கோள்களில் ஆக அதிக எண்ணிக்கையிலான நிலாக்களைக் கொண்டது எனும் பெருமையை வியாழனிடமிருந்து தட்டிப் பறித்துள்ளது சனிக் கிரகம்.

வியாழனுக்கு மொத்தம் 79 நிலாக்கள்.

1990களின் பிற்பகுதியிலிருந்து ஆக அதிக நிலாக்களைக் கொண்ட கோள் என்ற பெருமையை அது கொண்டிருந்தது.

சனியின் புதிய நிலாக்களை ஹவாயி தீவிலிருக்கும் சுபாரு தொலைநோக்கி மூலம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

ஒவ்வொரு புதிய நிலாவும் சுமார் 5 கிலோமீட்டர் விட்டத்தைக் கொண்டது.

அவற்றுக்குப் பெயரிட, போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்