Images
  • saudi hotel
    படம்: Reuters/Stephen Kalin

சவுதி அரேபியா: வெளிநாட்டு ஆண்களும் பெண்களும் இனி ஹோட்டல் அறைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சவுதி அரேபியாவில் வெளிநாட்டு ஆண்களும் பெண்களும் இணைந்து இனி ஹோட்டல் அறைகளை வாடகைக்கு எடுத்துத் தங்க முடியும்.

இருவருக்கும் உள்ள உறவுமுறையைக் குறிப்பிட இனி அவசியம் இல்லை. சவுதி அரேபியா புதிய சுற்றுப்பயண விசா விதிமுறையை அறிமுகப்படுத்திய பிறகு, அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்நாட்டுப் பெண்களும் இனி ஹோட்டல் அறைகளை வாடகைக்கு எடுக்க முடியும். இதற்கு முன்னர் அவ்வாறு செய்ய அனுமதி இல்லை.

புதிய மாற்றத்தின்மூலம், தனியாகச் செல்லும் பெண்கள் இன்னும் எளிதாகப் பயணம் புரியலாம். திருமணமாகாத வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் ஒன்றாகத் தங்க புதிய மாற்றம் வழிவகுக்கும்.

ஹோட்டலில் தங்கச் செல்லும்போது, சவுதி குடிமக்கள் தங்களின் குடும்ப அடையாளத்தைக் காட்ட வேண்டும். வெளிநாட்டினருக்கு அது தேவையில்லை.


Top