Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சவுதி அரேபியாவில் எண்ணெயைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரு சுற்றுலாத் தலம்

சவுதி அரேபியா என்றாலே பலருக்குப் பாலைவனம்...புனித மக்கா பள்ளிவாசல்... இவற்றுடன் நிச்சயம் எண்ணெயும் நினைவுக்கு வரும்.

வாசிப்புநேரம் -

சவுதி அரேபியா என்றாலே பலருக்குப் பாலைவனம்...புனித மக்கா பள்ளிவாசல்... இவற்றுடன் நிச்சயம் எண்ணெயும் நினைவுக்கு வரும்.

ஆம், உலகின் ஆகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடு சவுதி அரேபியா.

எனவே, எண்ணெயைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரு சுற்றுலாத் தலத்தை உருவாக்கினால் என்ன என்று அந்நாடு யோசித்துள்ளது போல...

சவுதி அரேபியாவில் எண்ணெய்த் துரப்பண மேடையை மையமாகக் கொண்டு ஒரு கேளிக்கைப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

அது குறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அரேபிய வளைகுடாவில் அமைந்துள்ள எண்ணெய்த் துரப்பண மேடை, கேளிக்கைப் பூங்காவாக மாற்றப்படும் என்று என்று CNN சொன்னது.

The Rig என்று அழைக்கப்படும் புதிய கேளிக்கைப் பூங்கா, 150,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும்.

கேளிக்கைப் பூங்காவில் 3 ஹோட்டல்கள், 11 உணவகங்கள், Roller Coaster சவாரி, பஞ்சீ (Bungee), skydiving உள்ளிட்ட சாகசத் தலங்களையும் எதிர்பார்க்கலாம்.

2030-ஆம் ஆண்டுக்குள் சவுதி அரேபியாவைச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக, The Rig அமையும் என்று நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்