Images
  • Saudi
    படம்: Bandar Algaloud/Courtesy of Saudi Royal Court/Handout via REUTERS

கஷோகி படுகொலை குறித்த துருக்கியின் புலனாய்வை சவுதி அரேபியா கீழறுத்தது - ஐக்கிய நாட்டு நிறுவனம்

செய்தியாளர் ஜமால் கஷோகியின் படுகொலை குறித்த துருக்கியின் புலனாய்வை சவுதி அரேபியா கடுமையாகக் கீழறுத்திருப்பதாய் ஐக்கிய நாட்டு நிறுவன நிபுணர் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி, சவுதி அரேபியத் தூதரகத்தில், திரு. கஷோகி கொலை செய்யப்பட்டார்.

அங்கு சென்று புலனாய்வு நடத்த கொலை நடந்த 13 நாள்களுக்குப் பின்னரே துருக்கிப் புலனாய்வாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஐக்கிய நாட்டுச் சிறப்புப் பிரதிநிதி Agnes Callamard வெளியிட்ட முதற்கட்ட அறிக்கை அதனைச் சுட்டிக்காட்டியது.

சவுதி அரேபிய அரசாங்கம் திட்டமிட்டு நடத்திய கொடூரமான நடவடிக்கையில், திரு. கஷோகி மாண்டதாக அறிக்கை குறிப்பிட்டது.

சவுதி அரேபியாவின் 13 நாள் தாமதம் காரணமாக, துருக்கியின் புலனாய்வு நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

திரு. கஷோகி படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி, 11 சந்தேக நபர்கள் மீது சவுதி அரேபியா நடத்திய விசாரணை குறித்தும் அறிக்கை சாடியது.

அதன் நம்பகத்தன்மை குறித்தும், வெளிப்படைத்தன்மை குறித்தும் அறிக்கை கணிசமான கேள்விகளை எழுப்பியது.

திரு. கஷோகி படுகொலை குறித்த ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் புலனாய்வு இறுதி அறிக்கை, வரும் ஜூன் மாதம், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமை மன்றத்திடம் ஒப்படைக்கப்படும்.


Top