Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தைரியமான, புதிய கனடியரை வரவேற்ற கனடா

சவுதி அரேபியாவிலிருந்து, குடும்பத்தினரின் துன்புறுத்தலுக்கு அஞ்சி தாய்லந்துக்குத் தப்பியோடியதாகக் கூறும் பெண், கனடியத் தலைநகர் டொரொண்ட்டோ சென்றுசேர்ந்துள்ளார்.

வாசிப்புநேரம் -
தைரியமான, புதிய கனடியரை வரவேற்ற கனடா

(படம்: REUTERS/Carlos Osorio)

சவுதி அரேபியாவிலிருந்து, குடும்பத்தினரின் துன்புறுத்தலுக்கு அஞ்சி தாய்லந்துக்குத் தப்பியோடியதாகக் கூறும் பெண், கனடியத் தலைநகர் டொரொண்ட்டோ சென்றுசேர்ந்துள்ளார்.

18 வயது ரஹாவ் முகமது அல்-குனுனைக் கனடிய வெளியுறவு அமைச்சர் வரவேற்றார். தைரியமான, புதிய கனடியரை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

குமாரி அல்-குனுன், சென்ற வாரம் பேங்காக் விமான நிலைய ஹோட்டலிலிருந்து வெளியிட்ட Twitter பதிவுகள் உலகின் கவனத்தை ஈர்த்தன.

சவுதி அரேபியாவுக்குத் திருப்பி அனுப்பினால் தமது உயிருக்கு ஆபத்து என்று அவர் பதிவிட்டிருந்தார்.

பின்னர் ஐக்கிய நாட்டு நிறுவன அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி, கனடா அவருக்கு அடைக்கலம் தந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்