Images
  • saudi girl
    (படம்: AP/Sakchai Lalit)

சவுதி அரேபியக் குடும்பத்தினரின் துன்புறுத்தலிலிருந்து தப்பிச்சென்றதாகக் கூறும் பெண்ணுக்கு அடைக்கலம் தந்துள்ள கனடா

குடும்பத்தினரின் துன்புறுத்தலுக்கு அஞ்சி, சவுதி அரேபியாவிலிருந்து தாய்லந்துக்குத் தப்பிச்சென்றதாகக் கூறும் 18 வயதுப் பெண்ணுக்குக் கனடா அடைக்கலம் தந்துள்ளது.

ரஹாவ் முகமது அல்-குனுனுக்குத் (Rahaf Al-Qunun) தஞ்சம் அளிக்கும்படி ஐக்கிய நாட்டு நிறுவன அதிகாரிகள் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் டிரூடோ கூறினார்.

மனித உரிமை, பெண்களின் உரிமை ஆகியவற்றுக்குத் துணைநிற்பது எவ்வளவு முக்கியம் என்று கனடா அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, குமாரி அல்-குனுன் பேங்காக்கிலிருந்து கனடாவுக்குப் புறப்பட்டுவிட்டதாக தாய்லந்துக் குடிநுழைவு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

குமாரி அல்-குனுனின் குற்றச்சாட்டை மறுத்து, அவரை நேரில் காணத் தாய்லந்து சென்றிருந்த அவரது தந்தையையும், சகோதரரையும் சந்திக்க அவர் மறுத்துவிட்டார்.

அவர்களும் தாய்லந்திலிருந்து கிளம்பிச்சென்றதாக அதிகாரிகள் கூறினர்.

Top