Images
  • Saudi-Iran
    (படம்: Reuters)

சவுதி அரேபியா-ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்

சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆக அண்மையில், சவுதி அரேபியக் கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 3 ஈரானியக் கப்பல்கள்மீது சவுதி கடற்கரைப் பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு முதலில் இணங்காத ஈரானியக் கப்பல்கள் பின்னர் பின்வாங்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையே, ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகில் உள்ள மலைப்பகுதியிலிருந்து, கடந்த வாரம் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதைத் துணைகோளப் படங்கள் காட்டியுள்ளன.

குறிப்பிட்ட அந்த மலைப்பகுதி ஏவுகணை தயாரிக்கும் தளமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வெடிப்புச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

Top