Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இம்மாத இறுதிக்குள் எண்ணெய் உற்பத்தி முழுமையாகச் சீர் செய்யப்படும் : சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் அடுத்த மாத இறுதிக்குள் எண்ணெய் உற்பத்தி முழுமையாகச் சீர் செய்யப்படும் என்று அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் அப்துல் அஸிஸ் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -
இம்மாத இறுதிக்குள் எண்ணெய் உற்பத்தி முழுமையாகச் சீர் செய்யப்படும் : சவுதி அரேபியா

(படம்: AFP)

சவுதி அரேபியாவில் அடுத்த மாத இறுதிக்குள் எண்ணெய் உற்பத்தி முழுமையாகச் சீர் செய்யப்படும் என்று அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் அப்துல் அஸிஸ் கூறியுள்ளார்.

Saudi Aramco நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் நிலையங்கள் மீது கடந்த சனிக்கிழமை ஆளில்லா வானூர்தி, ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களில் எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்குச், சுமார் 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த மாதமும், அடுத்த மாதமும் நாள்தோறும் சராசரியாக 9.9 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று சவுதி அரேபியப் பட்டத்து இளவரசருமான திரு அப்துல் அஸீஸ் கூறினார்.

இந்தச் சவால்மிக்க காலத்தில் இருந்து, சவுதி அரேபியா மீண்டுவரும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்