Images
  • sausage

இறைச்சி சேமிப்பு அறையில் சிக்கிய கடைக்காரர்- அவரைக் காப்பாற்றிய சாஸேஜ்

பிரிட்டன்: இறைச்சிக் கடைக்காரர் ஒருவர் உறைநிலைக்குக் கீழ்
20டிகிரி செல்சியஸ் குளிர்நிலை கொண்ட இறைச்சி சேமிப்பு அறையில் மாட்டிக்கொண்டார்.

சாஸேஜ் ஒன்று அவரைக் காப்பாறியது.

70-வயது கிரிஸ் மெக்கேப், இறைச்சி சேமிப்பு அறையினுள் சென்றபோது அதன் கதவு காற்றில் தானாகவே மூடிக் கொண்டதை அறிந்தார்.

அத்தகைய சந்தர்ப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வழிமுறை அவருக்குத் தெரியும் என்பதால் அவர் பதறவில்லை.

இறைச்சி சேமிப்பு அறையினுள் இருக்கும் அவசரப் பொத்தானை அழுத்த முயன்றார்.

ஆனால் அது கடுங்குளிரில் உறைந்து போயிருப்பதை அறிந்த பின்னர்தான் பதறத் தொடங்கினார்.

உதவிக்குக் குரல் கொடுத்தார். ஆனால் அவரது கூக்குரல் யாருக்கும் எட்டவில்லை.

அத்தகைய இறைச்சி சேமிப்பு அறையினுள் சிக்கினால் ஒரு மனிதர் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே உயிர் பிழைக்கமுடியும்.

அதனால், அவசரகாலப் பொத்தானைத் திறக்க, கனமான பொருளைத் தேடியபோது எதுவும் கைக்கு வாகாக அகப்படவில்லை.

கடைசியில், ஒரு சாஸேஜ் அதற்குப் பொருத்தமாகக் கிடைத்தது.

சுமார் 1.5 கிலோகிராம் கொண்ட சாஸேஜைக் கொண்டு இறைச்சி சேமிப்பு அறைக் கதவின் பூட்டை அடித்து உடைக்கத் தொடங்கினார்.

பின்னர் பாதுகாப்பாக வெளியேறினார்.

காவல் துறையினர் கதவுகளை உடைக்க உதவும் ஆயதத்தைப் போல சாஸேஜ் இருந்ததால் அதைப் பயன்படுத்தியதாகக் கூறினார் மெக்கேப்.

விற்பனையானவை போக, அதிர்ஷ்டவசமாகக் கடையில் இருந்த இறுதி சாஸேஜ் அது.

இறைச்சிக் கடைக்காரர் விற்கும் உறைந்த இறைச்சியை வாங்க வாடிக்கையாளர்கள் முன்வருவர்.

ஆனால், உறைந்துபோன இறைச்சிக் கடைக்காரரை யாராவது வாங்குவார்களா என்று கேட்டுச் சிரிக்கிறார் கடைக்காரர்.  

உங்கள் கருத்து

Top