Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பருவநிலை மாற்றத்தால் பெங்குவின்களின் எண்ணிக்கை பாதியாகக்கூடும்

அன்ட்டார்ட்டிகா வட்டாரத்தின் Emperor பெங்குவின்களைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

வாசிப்புநேரம் -
பருவநிலை மாற்றத்தால் பெங்குவின்களின் எண்ணிக்கை பாதியாகக்கூடும்

படம்: AFP/ MARCEL MOCHET

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அன்ட்டார்ட்டிகா வட்டாரத்தின் Emperor பெங்குவின்களைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

பெங்குவின்கள் அந்த வட்டாரப் பனிப்பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து அவற்றின் குஞ்சுகளை வளர்த்துவருகின்றன.

உலக வெப்பமயமாதலால் அந்தக் கடற்பகுதியின் பனி உருகினால் அவற்றின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அது நடந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் பாதியளவு பெங்குவின்களே எஞ்சியிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.

பேரழிவை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் Emperor பெங்குவின்களை முன்னிலையில் வைக்கும்படி ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்