Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஸ்காட்லந்து: ரயில் தடம் புரண்டதில் பலருக்குக் காயம்

ஸ்காட்லந்தில் (Scotland), ரயில் ஒன்று தடம் புரண்டதில் பலர் கடுமையாகக் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஸ்காட்லந்து: ரயில் தடம் புரண்டதில் பலருக்குக் காயம்

(படம்:Twitter/@EuanSteuart)

ஸ்காட்லந்தில் (Scotland), ரயில் ஒன்று தடம் புரண்டதில் பலர் கடுமையாகக் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அது நாட்டில் நேர்ந்துள்ள பெரும் விபத்து என, முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் (Nicola Sturgeon) அறிவித்துள்ளார்.

இரவு முழுவதும் கடும் மழை பெய்ததை அடுத்து, எபர்டீன் (Aberdeen) எனும் நகருக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் ரயில் தடம் புரண்டதாக நம்பப்படுகிறது.

சம்பவத்தையொட்டி இன்னும் உறுதியான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

எனினும், பலர் மோசமாய்க் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவர் மாண்டதாக, ஊடகம் ஒன்று கூறியபோதும் அது உறுதி செய்யப்படவில்லை.

சம்பவம் நேர்ந்த இடத்துக்கு அருகே எடுக்கப்பட்ட காணொளியில், 25 காவல்துறை வாகனங்களும், அவசர உதவி வாகனங்களும் காணப்பட்டன.

ரயில் தடம்புரண்ட சம்பவத்தை அறிந்து அதிகக் கவலையடைந்ததாக, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்