Images
  • Thai navy
    படம்: Thai Navy

தாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை ?

தாய்லந்துக்குச் சொந்தமான கடல் பகுதியில் வீடு கட்டி குடியேறிய அமெரிக்க ஆடவருக்கும் அவரது காதலிக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

அந்த ஆடவரும் அவரது காதலியும் செய்த செயல் நாட்டின் அரசுரிமைக்குப் பங்கம் விளைவித்துள்ளதாகக் கடல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புக்கெட் தீவில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில் அந்த கடல் வீடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் கடல் வீடு தாய்லந்தின் சட்ட ஆட்சி எல்லைக்கு வெளியே இருப்பதாக மின்னிலக்க நாணயம் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சாட் எல்வாட்டோவ்ஸ்க்கி (Chad Elwartowski) கூறுகிறார்.

தகுந்த அனுமதி இல்லாமல் கடலில் வீடு கட்டியது சட்டவிரோதமான செயல் என்று கடல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.

Top