Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அலாஸ்கா கடற்கரைகளில் சுமார் 60 கடல்நாய்கள் மடிந்து கிடந்தன

அலாஸ்காவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கடற்கரைகளில் சுமார் 60 கடல்நாய்கள் மடிந்து கிடந்ததாக தேசியப் பெருங்கடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
அலாஸ்கா கடற்கரைகளில் சுமார் 60 கடல்நாய்கள் மடிந்து கிடந்தன

(படம்: Pixabay)

அலாஸ்காவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கடற்கரைகளில் சுமார் 60 கடல்நாய்கள் (Seals) மடிந்து கிடந்ததாக தேசியப் பெருங்கடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடல்நாய்கள் மாண்டதற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

சம்பவம் பேரிங் (Bering) கடல், சுக்சி (Chuckchi) கடலின் கடற்கரைகளில் நடந்தது.

அந்தக் கடல்களில் பனிக்கட்டிகளின் அடர்த்தி குறைந்துவிட்டதாகவும், மேற்பரப்பின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பேரிங் கடலில் இருந்த பனிக்கட்டிகள் எல்லாமே கிட்டத்தட்ட உருகிவிட்டன.

அந்த இரண்டு கடல்களின் மேற்பரப்பில் நிலவும் சராசரி வெப்பம்
4.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.

கடல்நாய்கள் உணவு தேடவும், ஓய்வெடுக்கவும், குட்டிகளை வளர்ப்பதற்கும் பனிப் பாளங்கள் தேவை.

மாண்ட கடல்நாய்கள் 3 வகையைச் சேர்ந்தவை:

- தாடியுடையவை
- புள்ளிகள் கொண்டவை
- வளையம் கொண்டவை

இவற்றில் தாடி, வளையம் கொண்ட கடல்நாய் வகைகள் அருகி வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்