Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: சியேட்டல் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு

அமெரிக்காவின் சியேட்டல் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு. நேற்று அதிகாலை பனிப்போர்வையால் மூடப்பட்டிருந்தது சியேட்டல் நகரம்.  

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: சியேட்டல் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு

படம்: REUTERS/Cliff DesPeaux

அமெரிக்காவின் சியேட்டல் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு. நேற்று அதிகாலை பனிப்போர்வையால் மூடப்பட்டிருந்தது சியேட்டல் நகரம்.  

வாஷிங்டனின் மேற்குப் பகுதியில் அரிதாக பனிச் சூறாவளி வீசியது.

ஓராண்டில் பொழிய வேண்டிய பனி, ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது.

சியேட்டல் - டகோமா அனைத்துலக விமான நிலையத்தில் சுமார் 16 சென்ட்டிமீட்டர் உயரத்துக்குப் பனி உறைந்திருந்தது.

கடந்த இருபது ஆண்டுகளில் ஒரே நாளில் இரண்டாவது முறை இந்த அளவு பனி பெய்துள்ளது.

நேற்றுடன் பனி கொட்டுவது நின்றுவிட்டது.

எனினும் இன்று பிற்பகலிலும் நாளைக் காலையிலும் பத்து சென்ட்டிமீட்டர் வரை பனிபெய்யும் வாய்ப்பு உண்டு என்று வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்