Images
  • Rome

Selfie எடுக்க அடிதடியில் இறங்கிய பெண்கள்

ரோம் நகரில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான டிரேவி நீருற்றின்முன் Selfie  எடுப்பதற்காக இரண்டு பெண்கள் அடித்துக்கொண்டனர்.

யார் முதலில் Selfie எடுப்பது என்பதில் பிரச்சினை.

இரண்டு பெண்களும் அடித்துக் கொண்டபோது அவர்களுடன் இருந்தவர்களும் சண்டையில் சேர்ந்துகொள்ளவே அந்த இடம் ஒரு வன்முறைக்களமாக மாறியது.

மாலை நேரத்தில் தம்படம் எடுக்க அந்த இடம் உகந்ததாக இருக்கும் என்பதால் இரு பெண்களும் போட்டிபோட்டனர்.

போட்டி பெரிய சண்டையாக மாறியது.

பொது இடங்களில் வன்செயல்களில் ஈடுபட்டதற்காக இரு பிரிவினரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

Top