Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மலையில் selfie எடுக்க முயன்ற 21 வயதுப் பெண் மரணம்

ஆஸ்திரேலியா: சிட்னியில் selfie படங்களை எடுப்பதற்குப் பிரபலமான இடமாக விளங்கும் மலையுச்சியில் selfie எடுக்க முனைந்த 21 வயது விளம்பர அழகி அங்கிருந்து கீழே விழுந்து மாண்டார்.

வாசிப்புநேரம் -
மலையில் selfie எடுக்க முயன்ற 21 வயதுப் பெண் மரணம்

(படம்: Instagram)


ஆஸ்திரேலியா: சிட்னியில் selfie படங்களை எடுப்பதற்குப் பிரபலமான இடமாக விளங்கும் மலையுச்சியில் selfie எடுக்க முனைந்த 21 வயது விளம்பர அழகி அங்கிருந்து கீழே விழுந்து மாண்டார்.

பிரிட்டனைச் சேர்ந்த மெடலின் டேவிஸ் என்ற அந்தப் பெண், ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

டைமண்ட பே எனும் மலைப்பகுதியில் சூரியோதயத்தைக் காணச் சென்ற அவர், அழகிய காட்சியுடன் selfie எடுக்க எண்ணினார்.

ஆனால், டேவிஸ் மலையிலிருந்து தவறி விழுந்து, மாண்டார்.

அவரின் உடல், பின்னர் அடையாளம் காணப்பட்டது.

டைமண்ட பே மலைப்பகுதியில் இதுபோன்ற சம்பவம் நேர்ந்தது 6 மாதங்களில் இது 2-ஆவது முறை.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்