Images
  • covid sg
    கோப்புப்படம்: AFP/Roslan Rahman

COVID-19 நோயாளிகள் நுகரும், சுவைக்கும் ஆற்றல்களை இழப்பது ஏன்? - கண்டுபிடித்தனர் ஆய்வாளர்கள்

COVID-19 நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று நுகரும், சுவைக்கும் ஆற்றல்களைத் தற்காலிகமாக இழப்பது.

நோய்வாய்ப்படும் கால்வாசியினருக்கு அத்தகைய அறிகுறிகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

நுகரும், சுவைக்கும் ஆற்றல்களுக்குப் பொறுப்பான மூளைக்குத் தகவல் அனுப்பும் அணுக்களை (neurons) கிருமிகள் நேரடியாகத் தாக்குவதாய் ஆய்வாளர்கள் இதற்கு முன் நம்பினர்.

ஹார்வர்ட் (Harvard) பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வில், அந்த அணுக்கள் செயல்படத் துணைபுரியும் அணுக்கள் கிருமியால் தாக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் நுகரும், சுவைக்கும் ஆற்றல்கள் நீண்ட கால பாதிப்பை எதிர்நோக்குவதில்லை என்று விளக்கப்பட்டது. கிருமித்தொற்று குணமானவுடன் அவர்கள் இழந்த ஆற்றல்கள் மீண்டும் திரும்பிவிடுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கண்டுபிடிப்பை உறுதிசெய்ய கிருமியின் செயல்பாட்டை இன்னும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றனர் ஆய்வாளர்கள். 

Top