Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குடியேறிகளின் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவது நிறுத்துப்படவேண்டும்: மெலனியா டிரம்ப்

அமெரிக்க எல்லைப் பகுதியில் குடியேறிகளின் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் நடவடிக்கைக்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட எதிர்ப்புக் குரல் வலுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
குடியேறிகளின் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவது நிறுத்துப்படவேண்டும்: மெலனியா டிரம்ப்

(படம்: Leila Macor/AFP)

அமெரிக்க எல்லைப் பகுதியில் குடியேறிகளின் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் நடவடிக்கைக்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட எதிர்ப்புக் குரல் வலுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய அந்த நடவடிக்கையை நிறுத்துமாறு தலைமகள் மெலனியா டிரம்ப் கோரிக்கை விடுத்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கோரிக்கைகளை வலுப்படுத்தினர்.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம், எல்லைப் பகுதிக்கான பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியதும், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன், குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் சினத்தை வெளிப்படுத்தினர்.

நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட வேளையில் அது வலுத்தது.

பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவரவே தாமும் விரும்புவதாகக் கூறிய அதிபர் டிரம்ப், அத்தகைய நெருக்கடிக்கு ஜனநாயகக் கட்சியைத் தொடர்ந்து குறைகூறி வருகிறார்.

ஆனால், நெருக்கடிக்குக் காரணகர்த்தா திரு. டிரம்ப்தான் என்பது விமர்சகர்களின் கருத்து.

இந்நிலையில், அதிபர் நிர்வாகத்தின் கொள்கையைக் குறைகூறாவிட்டாலும், குடிநுழைவுக் கொள்கைகளில் சீர்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று திருமதி மெலனியா டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபரின் மனைவி அரசியல் விவகாரங்களில் கருத்துரைப்பது மிகவும் அரிது என்பதை கவனிப்பாளர்கள் சுட்டினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்