Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்து 18 ஆண்டானதன் தொடர்பில் நியூயார்க்கில் அஞ்சலி நிகழ்ச்சிகள்

அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்து 18 ஆண்டு ஆனதைக் குறிக்கும் விதமாக அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்து 18 ஆண்டானதன் தொடர்பில் நியூயார்க்கில் அஞ்சலி நிகழ்ச்சிகள்

(படம்: Don Emmert / AFP)


அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்து 18 ஆண்டு ஆனதைக் குறிக்கும் விதமாக அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தத் தாக்குதல்களில் மாண்டோரையும் உதவச் சென்ற அவசரப் பிரிவினருக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதங்களையும் பாதிப்புகளையும் மறக்கக்கூடாது என்று அமெரிக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடமான Ground Zeroவில் கூடி துக்கம் அனுசரித்தனர்.

இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்ட பென்ட்டகனில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கலந்துகொள்கிறார்.

பென்சில்வேனியாவில் மூன்றாவது தாக்குதல் நடந்த இடத்தில் துணை அதிபர் மைக் பென்ஸ் உரையாற்றவுள்ளார்.

தாக்குதல்கள் நடந்த வேளையில் அதிபராக இருந்த திரு. ஜார்ஜ் புஷ் பென்ட்டகனில் மலர் வளையம் வைப்பார்.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடந்த மூன்று தாக்குதல்களிலும் சுமார் மூவாயிரம் பேர் பலியாயினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்