Images
  • serial killer (1)

அமெரிக்க வரலாற்றில் ஆக அதிகமானோரைக் கொன்ற கொலையாளி

79 வயது ஆடவர் ஒருவர் 50க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் ஆக அதிகமானோரைக் கொன்றவர் அவர் என்று நம்பப்படுகிறது.

1970க்கும் 2005க்கும் இடைப்பட்ட காலத்தில் 93 கொலைகளைச் செய்ததாக ஒப்புக்கொண்டார் சாமுவெல் லிட்டில் (Samuel Little).

அவரால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.

அவர் கொலை செய்ததாகக் கூறப்பட்ட பெண்களின் மரணங்கள் போதைப்பொருள் காரணமாகவும் விபத்தாலும் நிகழ்ந்ததாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.

2014இல் மூன்று கொலைகளின் தொடர்பில் அவர் ஆயுள்தண்டனை பெற்றார்.

அவர் செய்த ஒவ்வொரு கொலைக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று புலனாய்வுத்துறை கூறியுள்ளது.

முன்னாள் குத்துச்சண்டை வீரரான சாமுவெல் லிட்டில் 2012இல் போதைப்பொருள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டார்.

Top