Images
  • st andrews

மகள் வசதியாகப் படிக்க 12 பணியாள்களைத் தேடும் இந்தியச் செல்வந்தர்

பிரிட்டனின் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் பயிலவிருக்கும் தமது மகளுக்குப் பணிவடைகள் செய்ய 12 பேரை வேலையில் அமர்த்த முற்படுகிறார் மர்ம இந்திய செல்வந்தர் ஒருவர்.

Silver Swan Recruitment எனும் வேலை வாய்ப்புத் தளத்தில் செல்வாக்கு மிக்க இந்திய குடும்பம் ஒன்று கார் ஓட்டுநர், சமையல்காரர், வீட்டு நிர்வாகி, தோட்டக்காரர், மூன்று துப்புரவாளர்கள் உட்பட 12 வேலைகளுக்கு விளம்பரம் கொடுத்துள்ளது.

மகளைக் காலையில் எழுப்புவதிலிருந்து அவரது அனைத்து பராமரிப்புத் தேவைகளுக்கும் ஒரு பணியாளர் பொறுப்பேற்பார்.

அவருக்குக் கதவுகளைத் திறக்கவும் கூட பணியாள்கள் அமர்த்தப்படுவர்.

இந்த வேலைகளுக்கு ஊதியம் ஆண்டுக்குச் சுமார் 30 ஆயிரம் பவுண்ட்ஸ் (54 ஆயிரம் வெள்ளி).

பள்ளி மாணவியின் ஆடம்பர வாழ்க்கைமுறைக்கு பல்கலைக்கழகம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாணவர்கள் பல்கலைக்கழகத்திலோ தனியாகவோ தங்கலாம் என்று அது தெரிவித்துள்ளது.

இதுவரை 12 வேலைகளும் நிரப்பபட்டுள்ளதாக Silver Swan Recruitment நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Top