Images
  • turbulence
    (படம்: Mirjeta Basha)

விமானம் ஆட்டங்கண்டதில் வீசியெறியப்பட்ட ஊழியர்

சுவிட்சர்லந்திலிருந்து கொசோவோ சென்றுகொண்டிருந்த விமானம் ஆட்டங்கண்டதில் அதிலிருந்த ஊழியர் ஒருவர் உட்கூரையை நோக்கி வீசியெறியப்பட்டார்.

ALK ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த சம்பவத்தைப் பயணி மிர்ஜெத்தா பாஷா காணொளியாகப் பதிவுசெய்துள்ளார்.

போயிங் 737-300 ரக விமானம் அந்தரத்தில் ஆட்டங்கண்டது அதில் பதிவாகியுள்ளது.

120க்கும் மேற்பட்ட பயணிகளிடையே பதற்றம்... சிலர் கூச்சலிட்டனர்.

உணவு, பானம் இருந்த வண்டியோடு ஊழியர் விமானத்தின் உட்கூரையை நோக்கி வீசியெறியப்பட்டது பயணிகள் மத்தியில் பீதியைக் கிளப்பியது.

பேசல் (Basel) நகரில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. லேசாகக் காயமடைந்த 10 பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக விமானப் போக்குவரத்து இணையத்தளமான AeroInside குறிப்பிட்டது.

அதிர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டதால் பயணிகளை முன்கூட்டியே இருக்கை வார் அணிந்துகொள்ளக் கோரியதாக விமான ஊழியர்கள் தெரிவித்தனர்.

Top