Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்னாப்பிரிக்காவின் கடற்கரைகளில் சுறாமீன்களைத் தடுத்து நிறுத்தும் வலைகள்- என்ன விளைவுகள்?

தென்னாப்பிரிக்காவின் கடற்கரையில் சுறா தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் வலைகளால் மற்ற கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வாசிப்புநேரம் -
தென்னாப்பிரிக்காவின் கடற்கரைகளில் சுறாமீன்களைத் தடுத்து நிறுத்தும் வலைகள்- என்ன விளைவுகள்?

(படம்: AFP)

தென்னாப்பிரிக்காவின் கடற்கரையில் சுறா தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் வலைகளால் மற்ற கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரைகளில் நீச்சலடிப்பவர்களுக்குச் சுறாமீன்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க 300 கிலோமீட்டர் தூரத்திற்கு வலைகள் பொருத்தப்படுகின்றன.

ஆனால் அந்த வலைகளில் கரைக்கு மிக அருகில் நீந்தக்கூடிய பெரிய கடல் விலங்குகளும் மாட்டிக்கொள்ளும் என்று சுற்றுப்புற ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சுறாக்கள் மட்டுமல்லாமல் டால்பின்கள், கடல் ஆமைகள் திமிங்கிலங்கள் ஆகியவை வலையில் சிக்கி மடிகின்றன.

சுறாமீன்கள் மனிதர்களை மிக அரிதாகவே தாக்கக்கூடும் என்று சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சில சமயங்களில் அத்தகைய வலைகள் பாதுகாப்பை விட அதிகத் தீமையை உண்டாக்கும்.

வலைகள், தூண்டிலிடப்பட்ட கொக்கிகள் போன்றவற்றில் நீண்ட நேரம் சிக்கி, ஆண்டுதோறும் குறைந்தது 400 சுறாக்கள் மூச்சுத் திணறலால் பாதிப்படைகின்றன.

சுறா மீன்கள் ஆபத்தானவை என்ற மக்களின் மனப்பான்மை மாற வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் சுறாமீன்களும் மற்ற கடல்வாழ் உயிரினங்களும் சுற்றுச்சூழலுக்கு மிக அவசியமானவை என்று சுற்றுப்புற ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்