Images
  • car
    படம்: REUTERS

4,000 கார்களை ஏற்றிச்சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்தது - 4 பேரைக் காணவில்லை

தென்கொரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்திற்கு அருகேயுள்ள கடல்பகுதியில் கவிழ்ந்தது.

மத்தியக் கிழக்குப் பகுதிகளுக்கு சுமார் 4,000 Hyundai Glovis, Kia ரகக் கார்களை ஏற்றிச்சென்ற அந்தக் கப்பல் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தின்போது கப்பலில் 24 பேர் இருந்ததாகவும் அதில் 20 பேர் மீட்கப்பட்டதாகவும் 4 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போன நால்வரும் இயந்திர அறையில் இருந்ததாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு கூறியது.

மீட்கப்பட்டவர்களில் 13 பேர் பிலிப்பீன்ஸைச் சேர்ந்தவர்கள், 6 பேர் தென்கொரியர்கள், ஒருவர் அமெரிக்கர்.

விபத்துக்குள்ளான கப்பல் 6933 கார்களைக் கொண்டுசெல்லக்கூடியது என்று கப்பல் நிறுவனம் தெரிவித்தது.

Top