Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனடியக் கடற்பகுதியில் தீப்பற்றிய சரக்குக் கப்பலில் இருந்து நச்சுவாயு வெளியேற்றம்

கனடியக் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த Zim Kingston என்ற சரக்குக் கப்பலில் தீ மூண்டதையடுத்து கப்பலில் இருந்து நச்சுவாயு வெளியேறுகிறது.

வாசிப்புநேரம் -


கனடியக் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த Zim Kingston என்ற சரக்குக் கப்பலில் தீ மூண்டதையடுத்து கப்பலில் இருந்து நச்சுவாயு வெளியேறுகிறது.

எனினும் அதனால் கரையில் உள்ளவர்களுக்கு எந்த அபாயமும் இல்லை எனக் கூறப்பட்டது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா நகருக்கு அப்பால் கப்பல் தற்போது நங்கூரமிட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான கடல் எல்லையைக் குறிக்கும் நீரிணை அது.

வான்கூவரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கப்பலில் தீப்பற்றியதாகக் கனடிய கடலோரக் காவற்படை கூறியுள்ளது.

கப்பலில் இருந்த 16 கடலோடிகளும் மீட்கப்பட்டனர்.

சுரங்கம் தோண்டுவதற்கான ரசாயனப் பொருள்கள் கப்பலில் உள்ளன. அதில் 10 கொள்கலன்கள் எரிந்துகொண்டிருப்பதாகக் கூறப்பட்டது.

கப்பலைச் சுற்றியுள்ள அவசரநிலை எல்லை, முன்தினம் ஒரு மைலாக இருந்தது. அது தற்போது 2 மைல் தூரத்துக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் இருக்கும் 52,000 கிலோகிராம் எடையிலான ரசாயனங்களின் காரணமாக, தீ மீது நேரடியாகத் தண்ணீரைப் பாய்ச்ச இயலாது என்று கடலோரக் காவல்படை விளக்கியுள்ளது. அதற்குப் பதிலாக, கப்பலின் மேற்பகுதி மீது, இழுவைப்படகு ஒன்று, குளிர்ச்சியான நீரைப் பாய்ச்சியதாகக் கூறப்படுகிறது.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்