Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன்: அனைத்துலகக் கப்பல் போக்குவரத்தால் ஏற்படக்கூடிய கரியமிலவாயு வெளியேற்றத்தை 2050ஆம் ஆண்டுக்குள் நிறுத்தத் திட்டம்

கப்பல் போக்குவரத்தால் ஏற்படக்கூடிய கரியமிலவாயு வெளியேற்றம் 2050ஆம் ஆண்டுக்குள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என்று பிரிட்டன் கேட்டுக்கொண்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

கப்பல் போக்குவரத்தால் ஏற்படக்கூடிய கரியமிலவாயு வெளியேற்றம் 2050ஆம் ஆண்டுக்குள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என்று பிரிட்டன் கேட்டுக்கொண்டுள்ளது.

காற்றுத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தாத சரக்குக் கப்பல்களை 2025ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யும்படி அது ஆலோசனை கூறியது.

COP26 பருவநிலை மாற்றம் குறித்த உச்சநிலை மாநாட்டை ஏற்றுநடத்தும் பிரிட்டன் அந்த வேண்டுகோளை முன்வைத்தது.

கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றாகத் துடைத்தொழிப்பதற்கு அனைத்துலகக் கடல்துறை அமைப்பு இணக்கம் தெரிவிக்கவேண்டும் என்று பிரிட்டனின் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.

உலக அளவில் மொத்தக் கரியமிலவாயு வெளியேற்றத்தில் 3 விழுக்காட்டுக்குக் கப்பல் சரக்குப் போக்குவரத்து காரணம் என்று கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்