Images
  • state court
    கோப்புப் படம்: TODAY

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறிய 5 சிங்கப்பூரர்கள் மீது குற்றச்சாட்டு

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறிய 5 சிங்கப்பூரர்கள் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.

இவ்வாண்டு மார்ச் 17ஆம் தேதிமுதல் ஆசியான் நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்து சிங்கப்பூர்வாசிகளுக்கும் 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்த ஐவருமே சிங்கப்பூருக்குள் நுழையும்போது தாங்கள் பின்பற்றவேண்டிய கட்டாய உத்தரவு பற்றி நினைவூட்டப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் இந்தோனேசியாவுக்கும் மற்றவர் மலேசியாவுக்கும் சென்றுவிட்டு இங்கு திரும்பிய சிங்கப்பூரர்கள்.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் அவர்களின் விதிமுறை மீறல்களை விசாரித்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒவ்வொருவருக்கும் 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.   

Top